2வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநிலம் முழுவதும் தடை: அதிரடி அறிவிப்பு!

சனி, 4 டிசம்பர் 2021 (08:14 IST)
இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதன்படி கர்நாடக மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து தியேட்டர்கள் மார்க்கெட்டுகள் பேருந்துகள் ரயில்கள் உள்பட அனைத்து பொது இடங்களிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்