சேலத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து - 8 பயணிகள் பலி

சனி, 1 செப்டம்பர் 2018 (07:43 IST)
சேலத்தில் இன்று காலை இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பயணிகள் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் என்ற இடத்தில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து தர்மபுரி சென்ற தனியார் பேருந்தும், பெங்களூருவில் இருந்து பாலக்காடு சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  
 
இந்த கொடூர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  பரிதாபமாக பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சேலத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
விபத்து குறித்து அறிந்த சேலம் கலெக்டர் ரோகிணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்