ஆறு வங்கிகளில் 350 கோடி கடன்; கனடாவுக்கு தப்பிய பஞ்சாப் பாஸ்மதி இயக்குனர்!

வெள்ளி, 3 ஜூலை 2020 (13:48 IST)
இந்தியாவில் உள்ள ஆறு வங்கிகளில் கடன் பெற்ற பஞ்சாப் பாஸ்மதி நிறுவனத்தின் இயக்குனர் நாட்டை விட்டு தப்பிவிட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மஞ்சித் சிங் மக்னி. இவர் பஞ்சாப் பாஸ்மதி நிறுவன பெயரில் கனரா வங்கியில் ரூ.175 கோடியும், ஆந்திரா வங்கியில் ரூ.53 கோடியும், யூபிஐ வங்கியில் ரூ.44 கோடியும், யூகோ வங்கியில் ரூ.41 கோடியும், ஒபிசி வங்கியில் ரூ.25 கோடியும், ஐடிபிஐ வங்கியில் ரூ.14 கோடியும் கடன் பெறப்பட்டுள்ளது.

ஆனால் கடன் தொகைகளுக்கான அசல் மற்றும் வட்டிகள் செலுத்தப்படாததால் 2018ம் ஆண்டில் அவை செயல்படாத சொத்துகள் என்ற வகையில் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து முதன்மை இயக்குனர் மஞ்சித் சிங் மக்னி மற்றும் துணை இயக்குனர்களான குல்விந்தர் சிங் மக்னி மற்றும் ஜாஸ்மீத் சிங் மக்னி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மஞ்சித் சிங் மக்னி கடந்த ஆண்டிலேயே இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாகவும், அவர் கனடாவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களை தொடர்ந்து மேலும் ஒரு தொழிலதிபர் வெளிநாடு தப்பியுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்