காஷ்மீர் எல்லைப்பகுதிகளை தனது சொந்த எல்லைப்பகுதிகளாக பாகிஸ்தான் வரைபடம் வெளியிட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் எல்லைப்பகுதிகள் தங்களுக்கு சொந்தமானவை என பாகிஸ்தான் ஆண்டு கணக்காக இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும் அவ்வபோது அத்துமீறல்களுக்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் தனது புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிற்குட்பட்ட காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளையும் சேர்த்து வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தன பிரதமர் இம்ரான்கான் இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பாகிஸ்தானின் அரசியல் வரைபடம் என்ற பெயரில் அபத்தமான வரைபடம் வெளியானதை பார்த்தோம். இந்தியாவின் எல்லைப்பகுதிகளை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் அரசியல்ரீதியாகவோ, நம்பகதன்மை அடிப்படையிலோ செல்லுபடியாகும் நிலையில் இல்லை” என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வங்க தேசம் இதுபோல இந்திய எல்லையை அபகரித்து வரைபடம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.