மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகளுக்கும் அரசு தரப்புக்கும் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டது போல தெரியவில்லை. இந்நிலையில் நாளுக்கு நாள் விவசாயிகள் போராட்டத்துக்கு மிகப்பெரிய ஆதரவு பெருகி வருகிறது.
ஆனால் பாஜகவின் மத்திய அமைச்சர்களோ விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் புகுந்துவிட்டனர் என்றும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஏஜெண்ட்கள் என்றும் துக்டே துக்டே கும்பல் என்றும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர்களின் இந்த கருத்துக்கு ப சிதம்பரம் டிவிட்டரில் விவசாயிகளை மத்திய அமைச்சர்கள் ஆயிரக் கணக்கான குழுக்களாக பிரித்து வருகின்றனர். அப்படி பார்த்தால் அங்கே விவசாயிகளே இல்லை. அப்படி என்றால் ஏன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.