வண்டி வண்டியாய் கிளம்பும் விவசாயிகள்: மத்திய அரசுக்கு தலைவலி!

சனி, 12 டிசம்பர் 2020 (08:31 IST)
டெல்லிக்கு 1200 டிராக்டர்களில் படையெடுக்கும் 50,000 விவசாயிகளால் வலுக்கும் போராட்டம். 
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் 16 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது.
 
இந்த போராட்டம் தொடர்ந்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்தும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்து வருகிறது. தற்போது விவசாயிகளின் போராட்டத்தின் பின்னால் வேறு சக்திகள் இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 
 
இதற்கு விவசாயிகள் தற்போது எங்களது போராட்டம் அரசியாற்றது என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சுமார் 1200 டிராக்டர்களில் 50,000த்திற்கு மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்