கோடிகளில் புரண்ட ப.சிதம்பரத்திற்கு வாரம் ரூ.1500! திஹார் ஜெயில் அப்டேட்

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (21:25 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே கோடியில் புரண்டவர். செல்வ செழிப்புமிக்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் இன்று அவர் திஹார் ஜெயில் வாரம் ரூ.1500 மட்டும் தனது குடும்பத்தினர்களிடம் இருந்து செலவுக்கு பெற்று வருகிறார்.  சிறையில் கொடுக்கும் உணவுகளையே ப.சிதம்பரம் சாப்பிட்டு வந்தாலும், சிறையில் பயன்படுத்தும் டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உள்ளிட்டவற்றை வாங்க  ப.சிதம்பரம் வாரம்தோறும் 1,500 ரூபாயைத் தனது குடும்பத்தினரிடம் இருந்து பெற்று வருவதாக திஹார் ஜெயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
 
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு திஹார் சிறைக் காவலர்கள் கூறியபோது, ``நீதிமன்ற காவல் மற்றும் தண்டனை கைதிகள் தங்களின் தேவைகளுக்காக வாரம் ஒருமுறை ரூ.1,500 ஐ அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து பெறலாம். சிறைக் கைதிகள் நல நிதியில் சேர்க்கப்பட்டு அதை வங்கி போல் டெபாசிட் செய்துகொள்ள முடியும். இதற்காகத் தனி கார்டு கொடுக்கப்படும். இதனைப் பயன்படுத்தி சிறையில் உள்ள கேண்டீனில் கைதிகள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அதனைப் பணமாக வைத்துக்கொள்ள முடியாது. இந்த விதிமுறைகளின்படியே ப.சிதம்பரத்துக்கும் அவரது குடும்பத்தினர் 1,500 ரூபாய் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் தனது அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொள்கிறார்" எனத் தெரிவித்துள்ளனர்.
 
 
சிறுவயதில் இருந்தே கோடியில் புரண்ட ப.சிதம்பரம் தற்போது தனது அடிப்படை தேவைகளுக்கு ரூ.1500 மட்டுமே பெற்று வருவது எவ்வளவு கோடி பணம் இருந்தாலும் அந்த பணம் வாழ்க்கையை முழுவதுமாக காப்பாற்றாது என்பதை நிரூபிக்கின்றது. மேலும் ப.சிதம்பரம் அவர்களுக்கு நாளை 74வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்