இனி இந்தியாவில் பிறக்கும் அனைத்து பெண் குழந்தைகளுக்கு இலவச வைப்புத் தொகையாக ரூ.11,000 செலுத்தப்படும் என்று ஆக்சி நிறுவனம் அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பெண் சிசு கொலை வெகுவாக குறைந்துவிடும்.
இனி இந்தாயாவில் பிறக்கும் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூ.11,000 வைப்புத் தொகையை ஆக்சி நிறுவனமே செலுத்தும் ஒரு அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணைநிறுவனர் ஷீத்தல் கபூர் கூறியதாவது:-
ஆக்ஸி நிறுவனத்தின் கனவு இந்தியாவில் ஆரோக்கியமான பெண் சமுதாயத்தை படைக்க வேண்டும் என்பதுதான். பெண்கள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்பட வேண்டும்.
ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் செய்த சாதனைகளைத் தொடர்ந்து இத்திட்டத்தை அறிவிப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார்.
மேலும் இத்திட்டத்தில் அனைத்து பெண்களும் கர்ப காலத்தில், பதிவு செய்து வைத்தால் போதும், பெண் குழந்தை பிறக்கும் பட்சத்தில் அவர்களுக்காக ரூ.11,000 தொகையை ஆக்சி நிறுவனம் வழங்கி பாலிசியை தொடங்கி வைக்கும்.
பெற்றோர்களுக்கு எந்த செலவும் இல்லை. பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும் போது பாலிசி முடிவடையும். அதன் பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் பெண் சிசு கொலை வெகுவாக குறைந்துவிடும்.