ஈஃபிள் டவர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஃபேஸ்புக் நண்பர்கள்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (18:39 IST)
சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் அறிமுகமாகிய இளம்பெண் ஒருவரை 3 பேர் சேர்ந்து ஈஃபில் டவர் அருகே பலாத்காரம் செய்த சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஃபேஸ்புக் மூலம் முகம் தெரியாத தொலைதூரத்தில் உள்ள பலரிடம் எளிதாக நண்பர்களாக முடியும். இதன் மூலம் பல குற்றச்செயல்களும் நடந்து வருகின்றன. அதேப்போல பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் நண்பராகி பழகி வந்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணை சந்திக்க பாரீஸில் ஈஃபில் டவர் அருகே அழைத்துள்ளார். இதனை ஏற்று அந்த பெண் அங்கு சென்ற போது தான் அந்த விபரீதம் நடந்துள்ளது.
 
அந்த பெண் ஈஃபில் டவரின் அருகே சென்றதும் அங்கு மறைந்திருந்த அந்த வாலிபர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் அந்த பெண்ணின் வாயை பொத்தி அருகில் உள்ள ஒரு மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
 
3 பேர் சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்ததால் அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அந்த மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து மறுநாள் காலை அந்த வழியாக நடைபயணம் வந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் பலாத்காரம் செய்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்