224 சட்டமன்றத் தொகுததிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி மேலிடம் முதல்வராக சித்தராமையாவையும், துணைமுதல்வராக சிவக்குமாரை அறிவித்தது.
அதன்படி, கிரக ஜோதி எனும் அனைத்து வீடுகளுக்கும், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரகலட்சுமி எனப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்குதல், அன்ன பாக்யா எனும் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதம் 10 கிலோ அரிசி வழங்குதல், யுவ நிதி திட்டத்தின் கீழ் வேலையில்லாதவர்க்கு 2 ஆண்டுகள் அலவன்ஸ் – பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்குவது சக்தி எனப்படும் திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம் ஆகிய 5 உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.