மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்.. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Mahendran

வியாழன், 27 ஜூன் 2024 (12:42 IST)
நாடாளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்றுமாறு சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதியுள்ளார். முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது என சமாஜ்வாடி கட்சி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது
 
மேலும் செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாடியின் ஆலோசனை நல்லது  காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியபோது, சமாஜ்வாடி எம்.பி. கூறியது நல்ல ஆலோசனையே என்றும், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, அரசு ஒரு பெரிய நாடகத்தை மத்திய அரசு நடத்தியது  என்றும் கூறினார்.
 
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்தபோது   நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்