காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்த நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் பதிவு செய்து வரும் நிலையில், பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.