இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, டி.ஆர். பாலு மற்றும் பிற கட்சித் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இந்த நிலைமையில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். சில ரகசியங்களை விவாதிக்க முடியாது என மத்திய அரசு கூறியது. அது சரிதான். ஆனால் தற்போதைய நடவடிக்கையில் அரசுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்” என்றார்.
அதேபோல், மல்லிகார்ஜுன கார்கேவும், “அரசு வழங்கிய தகவல்களை கவனமாக கேட்டோம். சில ரகசிய தகவல்களை வெளியிட முடியாது என்று தெரிவித்தனர். பாதுகாப்பு என்றாலே அது எல்லோருக்கும் பொதுவான விஷயம். எனவே, நாங்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பது குறித்த உறுதிமொழியை கூட்டத்தில் தெரிவித்தோம்” என்று கூறினார்.