கடைசியில் மழைதான் இந்தியாவ காப்பாத்தும் போல இருக்கு… மீண்டும் தடைபட்ட போட்டி!

vinoth

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (10:46 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

அதன் பின்னர் ஆடிவரும் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கே எல் ராகுல் தவிர மற்ற அனைவரும் சொதப்பியதால் மோசமான நிலையில் உள்ளது. தற்போது இந்திய அணி 180 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்த போட்டி தொடங்கியதில் இருந்து மழை பெய்து ஆட்டத்தைப் பாதித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருக்கும் இந்திய அணியை மழைதான் காப்பாற்றி வருகிறது. தற்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக நான்காம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்