டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரம் மூடப்படும்: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (17:37 IST)
டெல்லி எல்லைகள் ஏற்கனவே மூடப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் 
 
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பெரிய மாநிலங்களில் பாதிக்கும் அளவிற்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி எல்லையை மூடும்படி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார் இருப்பினும் இன்று முதல் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால் டெல்லி எல்லைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொளி மூலம் உரையாற்றியபோது டெல்லி எல்லைகள் மேலும் ஒருவர் மூடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் ஸ்பாக்கள் திறக்க அனுமதி இல்லை என்றும் கூறினார். மேலும் ஜூன் 5ஆம் தேதிக்குள் 9500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயாராகிவிடும் என்றும் கொரோனா நோயாளிகளுக்கு எந்தவித சிரமமுமின்றி சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்