ஒடிசாவில் திடீரென இணையதளத்தை கட் செய்த அரசு.. என்ன காரணம்?

Mahendran

திங்கள், 6 அக்டோபர் 2025 (12:08 IST)
ஒடிசாவின் கட்டாக் நகரின் பல பகுதிகளில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்ததை தொடர்ந்து, முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான அரசு சமூக ஊடகங்கள் மற்றும் இணைய சேவைகளுக்குத் தற்காலிக தடை விதித்துள்ளது.
 
பொது அமைதியை குலைக்கும் வகையில், வதந்திகள் மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கட்டுப்பாடுகள் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை கட்டாக் மாநகராட்சி, மேம்பாட்டு ஆணையப் பகுதி மற்றும் 42 மௌஸா மண்டலங்களில் அமலில் இருக்கும்.
 
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகச் சேவைகளும், மொபைல் டேட்டா மற்றும் பிராட்பேண்ட் உட்பட அனைத்து வகையான இணைய சேவைகளும் இந்திய தந்திச் சட்டம், 1885-இன் கீழ் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியை காக்கக் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்