ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில், 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று தெரிவித்துள்ளது. காவல்துறை தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மாணவி தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு, பின்னர் கணேஷ் சதுர்த்தி ஊர்வலத்தை பார்க்க சந்தைக்கு சென்றுள்ளார்.
வீடு திரும்பும்போது, ஒரு நபர் கொடுத்த லிஃப்டை ஏற்றுக்கொண்ட அந்த மாணவி, காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக டேரிங்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்தும், மருத்துவ பரிசோதனை நடத்தியும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு திருமணமான நபர் என்றும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது. இந்த வழக்கு குறித்து பேசிய கந்தமால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஷா பி.சி, விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.