கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூரில் 41 பேர் பலியானதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கும், சிறு கூட்டம் தொடங்கி மாநாடு வரைக்கும் அனைத்திற்கும் கட்டுப்பாடுகளை பலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அரசியல் கூட்டங்களில் 12 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்க தடை. அரசியல் கூட்டங்களில் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்காவிட்டால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும். கூட்டத்திற்கு பிறகு குப்பைகளை சம்பந்தப்பட்ட கட்சிகளே சுத்தம் செய்ய வேண்டும்.
சாலைகள், பொதுமக்கள் புழங்கும் பகுதிகளில் இனி அனுமதி கிடையாது. காலி இடங்கள், விளையாட்டு மைதானங்களில் மட்டுமே அனுமதி. பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நேரத்திற்கு சில மணி நேரம் முன்னதாக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர், உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து அனைத்து கட்சி கருத்துகளையும், மக்கள் கருத்தையும் கேட்டு தேர்தலுக்கு முன்பாக இந்த கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K