போன் பேசிக் கொண்டே 2 டோஸ் தடுப்பூசி போட்ட நர்ஸ்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:02 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண்ணுக்கு போன் பேசிக் கொண்டே நர்ஸ் இரண்டு தடுப்பூசி போட்டு விட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசம் கான்பூர் பகுதியில் 50 வயதான பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

முதல் தடுப்பூசி போட்டு இரண்டு வாரங்கள் கழித்தே இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய நிலையில் மருத்துவமனை செவிலியர் போன் பேசிக் கொண்டே இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெண்ணுக்கு செலுத்தியுள்ளார். இதனால் பெண்ணின் கைகள் வீங்கியதால் உறவினர்கள் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த விசாரணை மேற்கொள்ள மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்