கன்னியாஸ்திரிகள் செய்யுற வேலையா இது? அதிர்ச்சியில் பொதுமக்கள்

சனி, 7 ஜூலை 2018 (11:03 IST)
ஜார்க்கண்டில் உள்ள அன்னை தெரசா அறக்கட்டளையில் குழந்தைகளை விற்ற குற்றத்திற்காக 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழை எளிய மக்களுக்காக தனது வாழ்வையே துறந்தவர் தான் அன்னை தெரசா. உயரிய விருதான பாரத ரத்னா விருதை இவர் பெற்றுள்ளார். இவர் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், சிறு வயதில் கர்ப்பமடைந்த குழந்தைகளுக்கும் அடைக்கலம் தர பல தொண்டு நிறுவனங்களை நிறுவினார்.
 
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தை நிர்வாகித்து வந்த கன்னியாஸ்திரிகள், சிறு வயதில் கர்ப்பமடைந்த சிறுமிகளின் குழந்தைகளை காசிற்காக விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதுதொடர்பாக விசாரித்ததில், அந்த காப்பகத்தின் கன்னியாஸ்திரி கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரி ஆகிய இருவரும் சேர்ந்து 3 பச்சிளம் குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
 
இதையடுத்து கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். முற்றும் துறந்த கன்னியாஸ்திரிகளே இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குக்கு ஆளாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்