கேரளாவில் திடீரென தோன்றிய புதிய வகை வைரஸ்! 13 பேர் பாதிப்பு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (09:26 IST)
கேரளாவில் திடீரென தோன்றிய புதிய வைரஸ் காரணமாக அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை என்பதும் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேரளாவில் என்ற புதிய வகை நோரோ வைரஸ் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வலிமையானது என்றும் இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் இதுவரை 13 பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் நோரோ வைரசால் பாதிக்கப்பட்ட அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்