குற்றம் செய்யாவிட்டாலும் ரூ.500 கொடுத்தால் சிறை செல்லலாம்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (18:20 IST)
நாட்டிலேயே முதல் முறையாக தெலங்கானா அரசு ரூ.500 க்கு சிறைச்சாலையில் ஒரு நாள் தங்கி கண்டு ரசிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

 
குற்றம் செய்து தான் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது இல்லை. ரூ.500 இருந்தால் போதும் சிறைச்சாலையில் கைதிகளை போல ஒருநாள் முழுக்க தங்கி சிறைச்சாலையை கண்டு ரசிக்கலாம்.
 
தெலங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்ட மிகப்பழமையான சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் ரூ.500 கட்டி முன்பதிவு செய்தால் அங்கு சென்று கைதுகளை போல் ஒரு நாள் இருந்துவிட்டு வரலாம்.
 
இங்கு வருபவர்களுக்கு கைதிகள் போல் உடையணிந்து சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்பு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு போலவே அவர்களுக்கும் உணவு வழங்கப்படும். அவர்கள் விருப்பப்பட்டால் கைதிகளை போல சிறையில் தோட்ட வேளைகளை செய்யலாம்.
 
இல்லையென்றால் சிறையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று கட்டணம் செலுத்தி பார்வையிடலாம். பின்பு மாலை 6 மணிக்கு சிறைச்சாலை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள்.
அடுத்த கட்டுரையில்