நிதிஷ்குமார், லாலு பிரசாத் கூட்டணி தேர்தல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் இன்று திடீரென பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். லாலுபிரசாத் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்த அதற்கு லாலுபிரசாத் சம்மதிக்காததால் தனது பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பாஜக ஆதரவளிக்க பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவுடன் பேசி வைத்துவிட்டுத்தான் நிதிஷ்குமார் இந்த ராஜினாமா முடிவை எடுத்ததாகவும்கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் ஜனதா தள் கட்சிக்கு தற்போது 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 53 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏக்கள் இருந்தால் போதும் என்பதால் எளிதாக புதிய ஆட்சி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.