உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி : திமுகவை விளாசிய பாஜக தலைவர் !

வியாழன், 4 ஜூலை 2019 (19:26 IST)
இன்று  திமுக கட்சியினர் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக்கொண்டுள்ளனர். ஆம்! மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு  இன்று இளைஞர் அணிச் செயலாளர் பதவி வழங்கி  திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தலைமை கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. 
 
அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திமுக இளைஞர் அணி செயலாளராக் பணியாற்றி வரும் சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதைலாக திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின்படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் தலைவராவதற்கு முன் 30 ஆண்டுகள் இளைஞரணி செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை முரசொலியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல . கணேசன் இதுகுறித்து கூறியுள்ளதாவது :
 
லட்சியம் இல்லாததால் தான் திமுகவில் வாரிசுகள் நியமனம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்