இதனை தொடர்ந்து தற்போது பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா, கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், ஆனால் பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டணி ஆட்சியை கவிழக்க ஆசை இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்..
மேலும் கர்நாடகாவில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு தான் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றி வருவதாகவும், கூட்டணி அரசு மதச்சார்பற்ற கொள்கை மீது கூட்டணி அரசு நம்பிக்கை வைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் மூலம், பாஜக கர்நாடகாவின் கூட்டணி எம்.எல்.ஏக்களை இழுக்கப்பார்க்கிறது என்ற தகவல் சித்த்ராமையவுக்கு வந்திருப்பதாக சில செய்திகள் தெரிவித்தன. இது குறித்து நிருபர்கள் தேவகவுடாவிடம் கேட்டபோது, தான் நாட்டின் பிரதமராக இருந்தவன் எனவும், தான் ஆதாரம் இல்லாமல் பொய் சொல்ல மாட்டேன் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.