தியாகராஜா ஆராதனா நிகழ்ச்சி ஒளிபரப்பை திடீரென நிறுத்திய தூர்தர்ஷனுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

திங்கள், 8 ஜனவரி 2018 (00:32 IST)
ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும் தியாகராஜா ஆராதனை நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து, தனது பாராட்டுக்களை தூர்தர்ஷனுக்கு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென தியாகராஜா ஆராதனை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விளம்பரம் ஒளிபரப்பானது. இதற்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், எந்த இடத்தில் விளம்பரம் ஒளிபரப்புவது என்பதுகூட தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு தெரியாதா? என்று கோபத்துடன் ஒரு டுவீட்டை பதிவுசெய்தார்

நிர்மலா சீதாராமனின் இந்த கோபத்தால் அதிர்ச்சி அடைந்த தூர்தர்ஷனின் சி.இ.ஓ சசிசேகர், நிர்மலாவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை என்றும் உறுதியளித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்