மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்
இந்த பட்ஜெட்டில் என்னென்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறள் ஒன்றை தமிழில் கூறுவார் என்பது தெரிந்தது
நிர்மலா சீதாராமன் தமிழர் என்பதால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தத் திருக்குறளை அவர் கூறிவருகிறார். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில்
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இதே திருக்குறளை தான் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டின் போதும் கூற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன