மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரே வாரத்தில் 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அனைவருக்குமே ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் என்ற மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒன்பது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அனைவருக்கும் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை என இரட்டையர்கள் பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 18 குழந்தைகளில் எதிர்பாராத விதமாக ஒரு பெண் குழந்தை மட்டும் இறந்து விட்டதாகவும், மற்ற அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பாலகாட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை இரட்டை குழந்தைகள் பிறந்தது இல்லை என மருத்துவமனை மருத்துவர்கள் ஆச்சரியமாக தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் நிலாய் ஜெயின் என்பவர் இதுகுறித்து கூறியபோது, “கடந்த 30 வருட அனுபவத்தில் இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை” என கூறியுள்ளார்.