பிரச்சாரத்தில் ஆசிட் வீச்சு... கதிகலங்க வைத்த மர்ம நபர்!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:44 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் மீது லக்னோவில் ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த அவ்கையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் மீது லக்னோவில் ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அது ரசாயனம் கலந்த மை என்று தெரியவந்துள்ளது. மேலும் இது ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளானர். 
 
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் ஆவார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்