துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை கொண்டாடிய தொழிலதிபர்: திடீரென நிகழ்ந்த விபரீதம்

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (18:36 IST)
கர்நாடகாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை கொண்டாடிய நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபரீதம் காரணமாக அவரது நண்பர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் ஹோலிகர் என்ற தொழிலதிபர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை நள்ளிரவு 12 மணிக்கு மொட்டை மாடியில் நின்றுகொண்டு துப்பாக்கியால் சுட்டு கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை கொண்டாடினார். அப்போது அவரது துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டு அவரது நண்பர் வயிற்றில் பாய்ந்தது. இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரது நண்பரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தன்னால் தான் தனது நண்பரின் உயிர் போனது என்ற வருத்தத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன

Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்