எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

Siva
திங்கள், 1 ஜூலை 2024 (08:14 IST)
நாடு முழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அந்த சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வழியாக உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் 5.65 லட்சம் போலீசார், சிறை, நீதித்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இந்த சட்டங்கள் குறித்து பயிற்சி அளித்து தயார்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் மும்முரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

முன்னதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு  மூன்று புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்