மோடியை பின்னுக்குத் தள்ளிய நேசமணி !

வியாழன், 30 மே 2019 (13:55 IST)
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது டுவிட்டரில் காண்டிராக்டர் நேசமணி குறித்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. குறிப்பாக டுவிட்டரில் படு டிரெண்டிங் ஆகிவருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்.பிக்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியான சிறிது நேரத்தில் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரராத்திற்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
இந்நிலையில்மோடி அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளார்கள் என்று ஒட்டுமொத்த தேசம் மட்டுமல்லாமல் அண்டைநாடுகள் மற்றும் அயல்தேசங்களும் மிகவும் உற்றுநோக்கிவருகின்றன.
 
இதற்காக மோடி தலைமையில் அமையவுள்ள அமைச்சரவைக்காக நாட்டு மக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் டுவிட் செய்து வருகின்றனர்.
 
ஆனால் இதையெல்லாம் ஓவர்டேக் செய்யும்விதமாக தற்போது டுவிட்டரில் நேசமணி குறித்த அனுதாபங்களை பலரும் தெரிவித்து வருவதால் தற்போது அது  மோடியை பின்னுக்குத் தள்ளிவிட்டு டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்