நீரவ் மோடியின் சொத்துகள் பறிமுதல்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சனி, 15 மே 2021 (08:19 IST)
வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நீரவ் மோடியின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பி ஓடியவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீரவ் மோடி. கடந்த 2018 ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்து வந்தது. இதுகுறித்த வழக்கும் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தான் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு வெற்றியாக அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீரவ் மோடி மேல் முறையீடு செய்ய முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழ்ககில் பொருளாதார தலைமறைவு குற்றவாளிகளின் சட்டத்தின் கீழ் நீரவ் மோடிக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்