டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம்....விவசாயிகள் அறிவிப்பு

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (17:35 IST)
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக இன்று 13 வது நாளாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 1 கோடிக்கும் அதிகமனான விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர்.

மத்திய அரசு விவசாய பிரதிநிதிகள் தலைவர்களுடன் மீண்டும் 5 வது முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையே இன்று விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களான டி.கே.எஸ் இளங்கோவன் , டி.,ராஜா, சீதாராம் யெச்சூரி, மற்றும் சரத்பவார் உள்ளிட்ட  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில் இன்று ,மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்க விவசாயிகள் மறுத்துள்ளனர்.

இதனால், டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நாடு தழுவிய  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதேநாளில் நாடுமுழுவதுமுள்ள  பாஜக அலுவலங்கள் முற்றுகையிடப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் ஜெய்ப்பூர் – டெல்லி சாலையை டிசம்பர் 12 ஆம் தேதி முடக்குவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. #delhichallo

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்