டீ போடுவோம்.. ஸ்டைலா.. கெத்தா! –ரஜினி ஸ்டைலில் நாக்பூர் இளைஞர்!

புதன், 17 பிப்ரவரி 2021 (15:43 IST)
நாக்பூரில் டீக்கடை நடத்தி வரும் டோலி என்பவர் ஸ்டைலாக டீ போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாக்பூரில் சிறிய அளவிலான டீக்கடை வைத்திருப்பவர் டோலி என்ற இளைஞர். டீயை தவிர பிரபலமான ஸ்பெஷல் மெனு இல்லாதபோதும் இவரது டீக்கடைக்கு தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது. காரணம் டோலி டீ போடும் ஸ்டைல்தான். சமீப காலமாக டோலி ஸ்டைலாக டீ போடுவது, வாடிக்கையாளர்களுக்கு சில்லறை கொடுப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து கூறியுள்ள டோலி தனக்கு தமிழ் நடிகர் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் என்றும், அவரை பார்த்துதான் தானும் டீ போடுவதை ஸ்டைலாக செய்ய தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்