5 நாட்களில் இத்தனை லட்சம் பேரா? – கூ செயலிக்கு மாறும் இணையவாசிகள்!

புதன், 17 பிப்ரவரி 2021 (14:01 IST)
இந்தியாவில் ட்விட்டர் செயலிக்கு மத்திய அரசுக்கு முரண்பாடு எழுந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட கூ செயலி வரவேற்பை பெற்றுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பகிரப்படும் ட்வீட்டுகளை நீக்குவது குறித்து மத்திய அரசுக்கு, ட்விட்டர் நிறுவனத்திற்கும் முரண்பாடு எழுந்தது.

இந்நிலையில் இந்திய அரசியல் பிரமுகர்கள் ட்விட்டரை தவிர்த்து கூ என்னும் புதிய செயலியை முன்னிருத்தினர். அறிமுகப்படுத்தப்பட்டு 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கூ செயலியில் இதுவரை 9 லட்சம் பேர் இணைந்துள்ளனர். 7 இந்திய மொழிகளில் பதிவிடும் வசதி உள்ள நிலையில் இந்த செயலியில் சீன நிறுவனமும் பங்கீடு உள்ளதாக வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்