தாஜ்மஹாலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு

திங்கள், 9 ஜூலை 2018 (15:18 IST)
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பகுதியில் உள்ள மசூதியில் ஆக்ரா முஸ்லிம்கள் தவிர மற்ற முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆக்ரா மாவட்ட நீதிமன்றம், தாஜ்மஹாலில் உள்ள மசூதியில் ஆக்ரா முஸ்லிம்கள் தவிர மற்ற முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. ஏனென்றால் பாதுகாப்பு காரணங்களாலும், வெளிநாட்டில் இருந்தும் வரும் பயணிகளாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து தாஜ்மஹால் மசூதி மேலாண்மை கமிட்டியின் தலைவர் சயத் இப்ராஹிம் ஹூசைன் ஜைதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கின் மீதான மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம். இதனை சுற்றி மட்டுமே பார்க்க வேண்டும். தொழுகை நடத்த வேண்டுமென்றால், மசூதியில் நடத்தலாம் அதற்கு ஏராளமான மசூதிகள் இருக்கின்றன எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்