முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதம் வைத்துள்ளனர்... பாஜக எம்.பி., சர்ச்சை பேச்சு !.

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (15:55 IST)
இஸ்லாமியர்கள்  மசூதிகளில் கத்தி, சோடா பாட்டில் ,வாள் ஆகிய ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக கர்நாடக பாஜக எம்.பி ரேணுகாச்சாரி கூறியுள்ள சர்ச்சை கருத்துக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்துள்ள ஹோன்னாலி என்ற பகுதியில் மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  ஆதரவான பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக எம்.பி., ரேணுகாச்சார்யா, மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு பதிலாக முஸ்லிம்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளனர். அதனை, மதத் தலைவர்களும் பாதுகாத்து வருகின்றனர் என பேசினார். ரேணுகாச்சாரியின் இந்தக் கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. 
 
இதுகுறித்து கூறிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ், ரேணுகாச்சாரியின் கருத்துக்கும் பாஜக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை; இது அவரது சொந்த கருத்து என  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்