முஸ்லீம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்யலாம்: பஞ்சாப் ஐகோர்ட் தீர்ப்பு

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (14:58 IST)
முஸ்லிம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது முஸ்லிம் பெண் ஒருவர் தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்த நிலையில் தன்னுடைய மற்றும் தன்னுடைய கணவரின் குடும்பத்தில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் பஞ்சாப் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முஸ்லீம் மதத்தின் சட்டப்படி 16 வயதில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் அதனால் இந்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கினார் 
 
முஸ்லீம் மதத்தின் சட்டப்படி ஒரு பெண் பருவமடைந்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற விதி இருப்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்