கால்நடை மருத்துவரைக் கடத்தி மகளுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்… பீஹாரில் பரபரப்பு

வியாழன், 16 ஜூன் 2022 (11:31 IST)
பீஹாரில் கால்நடை மருத்துவர் கட்டாயமாக சிறுமிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை இரவு பீஹார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு சிறுமி ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்கிழமை, அவரது செல்போன் எண்ணிலிருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு அவரின் திருமணம் செய்துகொள்வது போன்ற வீடியோ வந்துள்ளது. இது சம்மந்தமாக சத்யம் என்ற அந்த மருத்துவரின் குடும்பத்தினர் அவருக்கு கட்டாயத் திருமணம் (பகடுவா விவாஹ்), செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சத்யம் திங்கள்கிழமை மாலை ஒரு விலங்குக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெக்ரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிதௌலி கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் திரும்பவில்லை. சத்யம் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்ததாக அவரது தந்தை சுபோத் குமார் ஜா குற்றம் சாட்டினார். கால்நடை மருத்துவரின் அதிக சம்பாத்யம் காரணமாக சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை மிரட்டி சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்