சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்த வர்ஷிதா என்ற 20 வயது மாணவி, ஆகஸ்ட் 14 அன்று தனது விடுதியிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்க வந்தபோது, தங்கள் மகள் இறந்துவிட்ட தகவலை அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வர்ஷிதா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அதற்கு பிறகு ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.