இந்த நிலையில் மாணவியின் வீட்டுக்கு இந்த காதல் விவகாரம் தெரிய வந்ததால் அந்த மாணவனுடன் பேசக்கூடாது என்று பெற்றோர்கள் நிபந்தனை விதித்துள்ளார்கள். இதனால் இருவரும் சந்திக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து உன்னை நிர்வாண நிலையில் வீடியோ எடுத்து உள்ளேன், என்னை தொடர்ந்து காதலிக்காவிட்டால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என்று மாணவன் மிரட்டியதாகவும், அது மட்டும் இன்றி உன்னையும் உன் தந்தையையும் கொலை செய்வேன் என மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக மாணவி தனது தந்தையுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.