மும்பையில் அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு! – இன்று முதல் 144 தடை உத்தரவு!

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (08:59 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில் மும்பையில் ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் பரவலை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் பல மாநிலங்களில் மொத்தமாக 24 ஒமிக்ரான் பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

இதில் மும்பையில் அதிகமாக ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு மும்பையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த வார விடுமுறை நாட்களிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்