மிஸ்டு கால் கொடுத்து ரயில் நிலவரம் அறியும் திட்டம் - மும்பையில் அறிமுகம்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (11:11 IST)
மும்பையில் புறநகர் ரயில் போக்குவரத்து நிலவரம் தெரிந்து கொள்ள மேற்கு ரயில்வே மிஸ்டு கால் சேவையை நேற்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
 

 
மும்பையில் புறநகர் ரயில்சவை பல்வேறு காரணங்களால் தாமதமாக வருவதும், நேரம் மாற்றப்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
 
இந்நிலையில் பயணிகள் இந்த ரயில்களின் போக்குவரத்து நிலவரத்தை தெரிந்து கொள்ள தங்களது செல்போன்களில் இணைய வசதி இல்லாமலேயே தெரிந்து கொள்ளும் புதிய வசதியை மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த சேவையில் பயணிகள் 1800 212 4502 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், இரண்டு ரிங்களில் அது தானாகவே அழைப்பினை துண்டித்த பின்னர், சில வினாடிகளில் செல்போனிற்கு மும்பை புறநகர் ரயில்களின் தற்போதைய போக்குவரத்து நிலவரத்தை பற்றிய தகவல்கள் எஸ்.எம்.எஸ்- ஆக வரும்.
 
முதற்கட்டமாக, இந்த வசதியை ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாக மேற்கு ரயில்வேயின், தலைமை பி.ஆர்.ஒ ரவீந்திர பாஸ்கர் தெரிவித்தார். மேலும் இந்த வசதியினை எந்த வகை செல்போன்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்