6 மிஸ்டு கால்ல மொத்த சோலியையும் முடிச்சிட்டான்: தலையில் துண்டு போட்ட பிஸ்னஸ்மேன்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (18:02 IST)
மும்பையில் உள்ள ஒரு தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ஆறு மிஸ்டு கால் மூலம் ரூ.1.86 கோடி பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்ட்ரல் மும்பை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மஹிம். இவர் ஒரு ஜவுளி வியாபாரி. இவர் மிகவும் பரபரப்பாக வந்து சைபர் கிரைம் போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். 
 
எனது மொபைல் போனுக்கு 6 மிஸ்டு கால்கள் வந்தது. அதன்பின் செல்போன் ஆஃப் ஆகிவிட்டது. காலையில் எழுந்து பார்த்த போது எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.86 கோடி பணம் வேறு சில வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருந்தது என தெரிவித்திருந்தார். 
 
இது குறித்து விசாரணை துவங்கிய போலீஸார் அந்த தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து டெல்லி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 14 வங்கிக் கணக்குகளுக்கு 28 முறை பண பரிமாற்றம் நடந்துள்ளன. 
பணப்பரிமாற்றம் அனைத்தும் எலக்ட்ரானிக் பண பரிமாற்ற முறையில் நடந்திருந்தது. இதனை யாரோ ஒருவர் சிம் இடமாற்று தொழில்நுட்பம் மூலம் செய்துள்ளனர் என போலீஸார் யூகித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இது குறித்து தொழிலதிபரின் கணக்கு இருந்த வங்கிக்கு தெரிவித்து பணபரிமாற்றத்தை நிறுத்துமாறு கேட்ட போது வங்கி தரப்பில் ரூ.20 லட்சத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இந்த நிகழ்வு மும்பை பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்