முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 28% விழுக்காடு குறைந்தது !

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (17:04 IST)
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 28% விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருள்ளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் பாதுகாக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக 693 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 4314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 
இந்த நிலையில், நாட்டில் ஊரடங்கால் நாட்டில் பொருளாதாரம் அந்நியச் செலாவணி, ஏற்றுமதி,இறக்குமதி,என எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசின் வருவாயும், நேர்முகவரி மறைமுக வரிவிதிப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி இந்தியப் பங்குசந்தை மதிப்பு கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. அதனால், முன்னணி தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் 28% விழுக்காடு குறைந்து ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் கோடியாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி அவரது சத்து மதிப்பு 3 லட்சத்து 65 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே,உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் அவர் 8 இடங்கள் பின்னடைவை சந்தித்து 17 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முகேஷ் அம்பானியைப் போலவே பல முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்