மோடியின் பெயரை ’பச்சை’ குத்தியதால் வேலை இழந்த வாலிபர்

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (15:39 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உடலில் பச்சை குத்தியவரை ராணுவத்தில் சேர்க்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
 

 
மத்தியப் பிரதேச மாநிலம் திம்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுரப் பில்கையான் (23). இவர், தனது மார்பில் பிரதமர் மோடி மற்றும் அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர்களை பச்சை (டாட்டூ) குத்தி வைத்துள்ளார்.
 
இந்நிலையில், அவர் ராணுவத்தில் சேர முயன்றதாகவும், ஆனால், அவரது மார்பில் குத்தப்பட்டிருந்த டாட்டூ காரணமாக அவர் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதே காரணத்திற்கு ஏற்கெனவே 4 முறை அவர் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மோடி மற்றும் சவுகானை சந்தித்து பேச உள்ளதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்