குழந்தையை வெள்ளையாக்க கருங்கல்லைக் கொண்டு தேய்த்த தாய் கைது

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (15:12 IST)
மத்தியப்பிரதேசத்தில் குழந்தையை வெள்ளையாக்கிட குழந்தையின் வளர்ப்புத்தாய், குழந்தையை கருங்கல் கொண்டு தேய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் சுதா திவாரி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார். குழந்தை கருப்பாக இருந்ததால், அக்கம் பக்கத்தாரின் பேச்சைக் கேட்டு, சுதா குழந்தையை கருங்கல் கொண்டு தேய்த்துள்ளார். இதனால் குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சுபாவின் உறவினர் ஒருவர், சுபாவிடம் இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியிருக்கிறார். ஆனால் சுதா இதனைக் கேட்கவில்லை.
இதனையடுத்து சுபாவின் உறவினர், குழந்தைகள் மீட்பு குழுவினரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தைகள் மீட்பு குழுவினர், காயமுற்ற குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீஸார் சுதா திவாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்