மீண்டும் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் எவ்வளவு?

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (10:32 IST)
இந்தியாவில் சமீபத்தில் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்து 10,093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். . 
 
 மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,093 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 57,542  பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நேற்று முன் தினம் 11000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் நாடு முழுவதும் 1000 பேர் கொரோனா வைரசால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும் நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்