அறிவித்த நாளுக்கு முன்னே தென்மேற்கு பருவமழை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஞாயிறு, 29 மே 2022 (12:21 IST)
இந்தியாவில் கணிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் தேவையான விவசாய மற்றும் பல்வேறு தேவைகளுக்குமான தண்ணீரில் முக்கியமான அளவு தென்மேற்கு பருவமழையின் மூலமாகவே கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழையால் அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயலால் இந்தியா அதிகமான அளவு மழையை பெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால் கணித்ததற்கு மாறாக கடந்த 3 நாட்கள் முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்